Ticker

6/recent/ticker-posts

குறள் மொழியில் மிளிரும் நபி மொழிகள்!-32


நிலையாமை

குறள் மொழி-79

நாளென ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்.

குறள் எண்:334

குறள் மொழியின் பொருள்:

நாள் என்பது ஒரு கால அளவு போல காட்டி. தொடர்ந்து பல நாட்களாக வந்து சிறிது சிறிதாக ஒருவனின் வாழ்நாளை, உயிரை அறுக்கின்ற வாள் என்பதை உணாதல் வேண்டும். நாள் ஒன்று போனால் வாழ்நாளில் ஒரு நாள் குறைகிறது என்பதை அறிக.

நபிமொழி:

நேரம் அல்ல வாழ்க்கையே குறைகிறது.ஆதமின் மகனே! வாழும் நாட்கள் குறைவு. நிச்சயமாக உங்களுக்குச் சில நாட்கள் மட்டுமே இவ்வுலகில் கடந்து செல்லும் ஒவ்வொரு நாளிலும் உங்களின் வாழ்நாளில் ஒரு பகுதி குறைந்து கொண்டே இருக்கிறது.
ஆதாரம் ஹஸனுல் பஸரி(ரலி)

கள்ளுண்ணாமை

குறள் மொழி 80

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார்.

குறள் எண்:922

குறள் மொழியின் பொருள்:

எச்சூழலிலும் மது அருந்தக் கூடாது. அறிவுள்ளவாகள், சான்றோர்களால் மதிக்கப்படக் கூடியவர்கள் மது அருந்துதல் கூடாது. அப்படி அருந்தினால் சான்றோர்கள் அவர்களை மதிக்க மாட்டார்கள்.

நபிமொழி:

எச்சூழலிலும் மதுவருந்த கூடாது. 커핀 சிறிதளவாகினும் கூடாது!! அது வாழ்வைச் சீரழிக்கும். போதை தரக்கூடிய அனைத்துப் பொருட்களும் (ஹராம்) தடுக்கப்பட்டவை தான்.

நபிகள் நாயகம் (ஸல்) பெருமானார். அறிவிப்பாளர்: அபூதாவூத்,

ஆள்வினை உடைமை

குறள் மொழி 81

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்.\

குறள் மொழியின் பொருள்:

ஒரு செயலைச் செய்வது கடினமானது என எண்ணி மனம் சோர்ந்து பின்தங்கி விடுதல் கூடாது. தக்க முயற்சி செய்தால் அம்முயற்சியானது நம் செயலால் பெருமை பெற்றுத் தரும்.

நபிமொழி:

செயலே பெருமை தரும்; குலமல்ல! அறச்செயல்களில் சோர்ந்து பின்தங்கிவிட்ட ஒருவரைக் குலச் சிறப்பு முன்னுக்குக கொண்டு வந்துவிடுவதில்லை. அவரது முயற்சியே அவருக்கான பெருமை சோக்கும்.

அண்ணல் நபிகள் (ஸல்) பெருமானார், நூல் முஸ்லீம்(

(தொடரும்)

 


Post a Comment

0 Comments