
திரு. அசோக ரன்வலவால் வெற்றிடமான நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு வைத்தியக் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவை நியமிக்க தேசிய மக்கள் சக்தியின் அரசியல் உயர்பீடம் தீர்மானித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதன்படி, நாளைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் சபாநாயகர் பதவி வெற்றிடம் அறிவிக்கும்போது, இவரின் பெயர் முன்மொழியப்படும்; வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டால், இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று அறிய வருகின்றது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் பட்டம் பெற்றுள்ள வைத்தியக் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன, பொலன்னறுவை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய மக்கள் சக்தியின் கீழ் 51391 விருப்பு வாக்குகளைப் பெற்று அம்மாவட்டத்தின் விருப்பு பட்டியலில் இரண்டாவது இடத்தில் வந்தவராவார்.

கட்டுரைகள் | Ai SONGS |


0 Comments