அமெரிக்காவின் விஸ்கோன்சின் மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் மாண்டனர்.
ஆறு பேர் காயமடைந்தனர்.
மாநிலத் தலைநகர் மெடிசனில் உள்ள Abundant Life Christian பள்ளியின் ஒரு பகுதியில் சந்தேக நபர் கைத்துப்பாக்கியை வைத்துத் தாக்குதல் நடத்தினார்.
பதின்ம வயது மாணவரும் ஆசிரியரும் மாண்டனர்.
மேலும் இரண்டு மாணவர்களின் நிலை கவலைக்கிடமாய் உள்ளது.
தாக்குதல் நடத்தியவரும் மாண்டார். அவர் அந்தப் பள்ளியின் மாணவர் என்று நம்பப்படுகிறது.
தாக்குதலுக்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments