Ticker

6/recent/ticker-posts

Ad Code



விவசாயிகளுக்கு ஆதரவாக பஞ்சாப்பில் ரயில் மறியல் போராட்டம் : விவசாய சங்கங்கள் அறிவிப்பு !


ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து இரு ஆண்டுகளுக்கு முன்னர் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஆனால் ஒன்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றாலும் விவசாயிகளுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை இன்னும் வழங்கப்படவில்லை.அதற்கான அறிவிப்பாணை இன்னும் வெளியிடவில்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் மீது ட்ரோன் மூலம் புகைக்குண்டு வீசி தாக்குதல், ரப்பர் குண்டு மூலம் தாக்குதல் நடத்தியது பாஜக அரசு.இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்த நிலையில், இளம் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் போராட்டத்தை விடாத விவசாயிகள் ஹரியானா எல்லையான ஷம்பு,கிநோரி ஆகிய இடங்களில் தேசிய நெடுஞ்சாலைகளில் தங்கி கடந்த 10 மாதங்களாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்க தலைவர் ஜக்ஜித் சிங் தாலேவால் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வந்தார். அவரது உண்ணாவிரத போராட்டம் இன்று 23-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது விவசாயிகளின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், இன்று விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப்பில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பஞ்சாப் விவசாயிகள் அறிவித்துள்ளனர். ஞ்சாப் மாநிலம் முழுதும் நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

kalaignarseithigal



Post a Comment

0 Comments