கடந்த பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினர்களுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அதன் சில பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில், 28 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர உள்ளிட்ட தரப்பினர் விரைவில் புதிய கூட்டணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilmirror
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments