
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவில் (Tokyo) மீன் சந்தை ஏலத்தில் டூனா மீன் ஒன்று 1.3 மில்லியன் டாலருக்கு (சுமார் 2 மில்லியன் வெள்ளி) விற்கப்பட்டுள்ளது.
தோக்கியோவில் ஆண்டுதோறும் நடைபெறும் புத்தாண்டு ஏலத்தில் டூனா மீனை வாங்க இதுவரை செலுத்தப்பட்ட இரண்டாம் ஆக அதிகமான விலை அது.
Michelin சான்றிதழ் பெற்ற சுஷி உணவகம் Onodera குழு bluefin ரக டூனா மீனை வாங்கியது.
கடந்த 5 ஆண்டாக அந்த உணவகம் புத்தாண்டு தினத்தன்று ஆக அதிக விலைக்கு டூனா மீனை வாங்கியுள்ளது.
சென்ற ஆண்டு அது சுமார் 1 மில்லியன் வெள்ளி செலுத்தி டூனாவை வாங்கியது.
புத்தாண்டில் ஆக அதிக விலைக்குப் போகும் டூனா அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை உள்ளது. வாடிக்கையாளர்கள் அதை உண்டால் அவர்களுக்கு இவ்வாண்டு சிறப்பாக இருக்கும் என்று நம்புவதாக உணவகம் சொன்னது.
மீனின் எடை 276 கிலோகிராம். அது ஒரு மோட்டார்சைக்கிளின் அளவுக்கு இருக்கும்.
டூனா மீனைப் பெற ஆக அதிகமான கட்டணம் 2019இல் செலுத்தப்பட்டது. 278 கிலோகிராம் எடைகொண்ட bluefin ரக டூனாவுக்குச் சுமார் மூன்று மில்லியன் வெள்ளி செலுத்தப்பட்டது.
அதை Sushi Zanmai உணவகத்தின் உரிமையாளர் வாங்கினார்.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments