
பிற உலக நாடுகளில் எப்படியோ தெரியாது, இந்தியாவை பொறுத்தவரை அனைத்து உறவு முறைகளுக்கும் பலர் மதிப்பும் மரியாதையும் அளித்து வருகின்றனர். அந்த உறவு முறைகளின் தூய்மை கெடாமலும் பார்த்து வருகின்றனர். அப்படிப்பட்ட உறவுகளில் ஒன்று, மாமனார்-மருமகள் உறவு. இது, தந்தை-மகள் உறவு போன்றதாகவும் பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த காலக்கட்டத்தில் இது போன்ற உறவுகளின் தரம் குறைந்து வருவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அப்படி பல சம்பவங்கள், இந்தியாவிலேயே நடந்தேரியிருக்கின்றன. அதே போன்ற ஒரு சம்பவம்தான் தற்போது மகாராஷ்டிராவிலும் நடந்திருக்கிறது.
மருமகளையே திருமணம் செய்த மாமனார்..
இந்த சம்பவம், மகாராஷ்டிராவில் உள்ள நாஷிக் பகுதியில் நடந்தேரியிருக்கிறது. ஒரு தந்தை, தன் மகனுக்கு ஏற்ற ஒரு பெண்ணை கண்டுபிடித்து, திருமண ஏற்பாடுகளை தானே முன்நின்று பார்த்திருக்கிறார். இரு குடும்பத்தாரின் ஒப்புதலுக்கு பிறகு, நாளும் குறிக்கப்பட்டு திருமணமும் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு புறம் மகன் திருமண கனவுகளில் மூழ்கியிருக்க, அவன் மலை போல நம்பியிருந்த சொந்த தந்தையோ அவனை முதுகில் குத்தியிருக்கிறார்.
அந்த மாமனார், தனக்கு மருமகளாக வரப்போகும் பெண் மீது காதலில் விழுந்திருக்கிறார். இதையடுத்து அந்த பெண்ணும் இவரும் இரு வீட்டு குடும்பத்தாருக்கும் தெரிவிக்காமல் நல்ல நேரம் கெட்ட நேரம் பார்க்காமல் திருமணம் செய்து கொண்டிருகின்றனர். இந்த விஷயத்தை கேள்விப்பட்டவுடன் திருமண ஆசையோடு இருந்த மகன், ஆடிப்போயிருக்கிறார்.
துறவறம் பூண்ட மகன்..
தன் சொந்த தகப்பனின் கையாலும், தனக்கு மனைவியாக வர இருந்த பெண்ணின் கையாலும் துரோகத்தை சந்தித்த அந்த மகன், இவ்வுலகையே வெறுக்க ஆரம்பித்திருக்கிறார். தன் தந்தை இப்படிப்பட்ட ஒரு காரியத்தை செய்த பிறகு, அவர் இனி திருமணமே செய்யக்கூடாது என முடிவெடுத்து, தனியாக வாழ வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்திருக்கிறார்.
அந்த தந்தையும், உறவினர்களும் “இந்த பொண்ணு இல்லன்னா என்ன? வேற நல்ல பொண்ணா பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம்” என எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அந்த மகன் யார் பேச்சையும் கேட்கவில்லை. சிலர், “இனி உன் தந்தையுடன் வாழ வேண்டாம். தனியாக இரு” என்றும் கூறியிருக்கின்றனர். யார் என்ன கூறியும், புண்பட்ட அந்த மகனின் மனம் மாறவே இல்லை எனக்கூறப்படுகிறது. தான் திருமணம் செய்துகொள்ள இருந்த பெண், தன் தந்தை கைக்கே போய் விட்டதை அந்த மகனின் மனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதனால் அவர் காதல் மற்றும் திருமண உறவில் இருந்த நம்பிக்கையை இழந்ததாகவும் கூறப்படுகிறது. .
இது முதல்முறையல்ல..
மேற்கூறிய விஷயத்தை போல, தொடர்ந்து பல சம்பவங்கள் இந்தியாவில் அரங்கேறியிருக்கிறது. தன் மகனை பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை, மாமியார் திருமணம் செய்து கொண்டது, தனது மனைவியை அவனது முன்னாள் காதலனுக்கு கணவனே திருமணம் செய்து வைத்தது போன்ற சம்பவங்கள் அரங்கேறியிருக்கிறது.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments