Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் டிரக் வாகனம் மூலம் தாக்குதல் – 15 பேர் பலி


அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ்( New Orleans) நகரில் டிரக் வாகனம் மூலம் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்தனர். சந்தேகநபர் ட்ரக் வண்டியை  கொள்ளையடித்து தாக்குதல் நடத்தியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சந்தேக நபரை கைது செய்ய முயன்ற பொலிஸாரை நோக்கி அவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் கொல்லப்பட்டதாக அமெரிக்க போலீசார் தெரிவித்தனர்.

சந்தேக நபரின் காணொளிகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் அவர் மத்திய கிழக்கில் உள்ள ஒரு போராளிக் குழுவால் ஈர்க்கப்பட்டவர் என்பதை தெளிவுபடுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் கூறினார்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தி லாரி டிரைவர் உயிரிழந்தார். மேலும் 7 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் கூற்றுப்படி, ஹோட்டல் வளாகத்தில் டிரக் வெடித்ததாக தகவல்கள்தெரிவிக்கின்றன. தாக்குதல் நடத்தியவர்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments