Ticker

6/recent/ticker-posts

விஜய்யுடன் கூட்டணி..? முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். சொன்ன பதில்


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தார். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அவர், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், “தன்னை கட்சியில் இருந்து விலக்கியது விதிமீறல்” என குறிப்பிட்டு இருந்தது குறித்து கேட்டபோது, “அனைத்தும் நீதிமன்றம் மூலம் தெரிவிக்கப்படும் பொறுத்திருந்து பாருங்கள்”.

“உறுதியாக அனைத்து இந்தியா அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களின் உரிமையை எம்.ஜி.ஆர். நிர்ணயம் செய்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் இதயத்தில் இருந்து எழுந்த கோரிக்கை உறுதியாக நிறைவேற்றப்படும்”.

“அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விவகாரம் சார்பாக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற துயர சம்பவங்கள் நடக்கக்கூடாது தடுக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்”.

“விஜய், தனிக்கட்சி ஆரம்பித்து வழிநடத்தி வருகிறார். அவருடைய அரசியல் எதை நோக்கி செல்கிறது என்பதை பார்த்து தான் உறுதியாக என்னுடைய கருத்துக்களை பதிவு செய்ய முடியும்”.

விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருக்கிறதா? என கேட்ட பொழுது, “கடைசியாக கொக்கி போட பார்க்கிறீர்கள்” என கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments