Ticker

6/recent/ticker-posts

முகமது சிராஜ் இங்கிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் தேர்வு செய்யப்படாததற்கு – இதுதான் காரணம்


இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது வரும் ஜனவரி 22-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த இங்கிலாந்து அணிக்கான டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அண்மையில் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ-யின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து டி20 தொடரில் முகமது சிராஜ் இடம்பெறாதது ஏன்? :

அந்த அணியில் சூரியகுமார் யாதவ் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைத்தது. இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது பலரது மத்தியிலும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

ஏனெனில் அண்மையில் காயம் காரணமாக வெளியேறிய பும்ரா மீண்டும் இந்திய அணியில் இடம்பெறுவது சந்தேகமாகியுள்ள வேளையில் பும்ராவிற்கு அடுத்து முன்னணி வீரராக இருக்கும் முகமது சிராஜ் இந்திய அணிக்கு மிக முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.

ஆனால் அவரை இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கான விடையும் தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடி இருந்தார்.

இதன் காரணமாக அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டே இந்த ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட இருப்பதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதோடு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒருவேளை பும்ரா விளையாடவில்லை என்றால் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர்தான் இந்திய அணியின் வேகப்பந்து யூனிட்டை வழி நடத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அறிமுகமான முகமது சிராஜ் இதுவரை 16 போட்டியில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

crictamil




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments