Ticker

6/recent/ticker-posts

தானாக பார்க் ஆகும் மஹேந்திரா மின்சார கார்.. பிரமித்து பார்த்த முதல்வர் ஸ்டாலின்


தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட மஹிந்திரா நிறுவனத்தின் புதிய மின்சார கார்களின் சோதனை ஓட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மஹிந்திரா நிறுவனம், 'பி.இ-6.இ' மற்றும் 'எக்ஸ்.இ.வி.-9.இ' என்ற இரு மின்சார எஸ்.யூ.வி. கார்களை கடந்த நம்பவர் மாதம் அறிமுகம் செய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் ஆலையில் இந்த கார்கள் தயாரிக்கப்பட்டன.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மஹிந்திரா நிறுவனத்தின் மின்சார கார்களை வாடிக்கையாளர்களின் சோதனை ஓட்டத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்த காரினுள் அமர்ந்தும் பார்த்தார். அப்போது காரில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து முதலமைச்சருக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விளக்கினார். மேலும், மின்சார கார் தானாக பார்க் ஆனதை பார்த்து முதலமைச்சர் பிரம்மித்தார்.

அதன்பின் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மஹிந்திரா நிறுவனத்தின் தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு பிரிவின் தலைவர் வேலுசாமி, மின்சார கார்களுக்கான முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாகத் தெரிவித்தார்.

news18




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments