
உக்ரேனுக்கு 2.5 பில்லியன் டாலர் (3.4 பில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) மதிப்புடைய உதவி வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) கூறியுள்ளார்.
நிதியில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கா வசம் உள்ள ஆயுதங்களை உக்ரேனுக்கு அனுப்புவதற்குப் பயன்படுத்தப்படும்.
எஞ்சிய பணம் ஆயுதங்களை வாங்குவதற்கு உதவும்.
புதிதாக அதிபராகும் திரு டோனல்ட் டிரம்ப் (Donald Trump) பதவிக்கு வந்த பின் உக்ரேனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவுமா என்பது தெரியவில்லை.
அமெரிக்கா உதவுவதைத் திரு டிரம்ப் பல முறை சாடியுள்ளார்.
அதிபரான சில மணி நேரத்தில் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான சண்டைக்கு முடிவுகட்டப் போவதாகவும் அவர் உறுதி கூறியுள்ளார்.
திரு டிரம்ப்பிடம் பொறுப்பை ஒப்படைப்பதற்குள் உக்ரேனுக்கு முடிந்தவரை அதிக உதவியை அனுப்பத் திரு பைடனின் நிர்வாகம் முனைகிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments