Ticker

6/recent/ticker-posts

உலகின் ஆக வேகமான ரயில்....எங்கே?


அதிவேக ரயில் என்பது எவ்வளவு வேகத்தில் செல்லும்?

சீனா மணிக்கு 450 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புதிய ரயிலை அறிமுகம் செய்துள்ளது.

அது உலகின் ஆக வேகமான ரயில் என்று நம்பப்படுகிறது.

CR450 ரயிலின் முன்மாதிரி நேற்று (29 டிசம்பர்) அறிமுகமானது.  

ரயில் வேகமாகச் சென்றாலும் எரிபொருளைக் குறைவாகப் பயன்படுத்தும்.

நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை அது பிரதிபலிப்பதாகச் சீனாவின் ரயில்வே அமைப்பு சொன்னது.

 உலகின் ஆக வேகமான ரயில்களில் சில ஏற்கனவே சீனாவில்தான் உள்ளன.

ஷங்ஹாய் அனைத்துலக விமான நிலையத்தையும் நகரத்தையும் இணைக்கும் ரயில் அதிகபட்சம் மணிக்கு 430 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

சீனா அதன் அதிகவேக ரயில்கள் நாட்டுக்கு அப்பால் செல்லவும் கனவு காண்கிறது.

அது அடுத்து தென்கிழக்காசிய நாடுகளை இணைக்கும் ரயில் சேவையை உருவாக்கப்போவதாகக் கூறுகிறது.

seithi




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments