
26 ஆவது தேசிய ஆக்க இலக்கிய பிரதிகளுக்கு விருதுகள் வழங்கும் விழா கடந்த 28 ந்திகதி சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு-7,அமைதுள்ள மகாவலி கேந்திர நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில் கௌரவ கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி அவர்களும் . கௌரவ முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன அவர்களும் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்கள். இவ்விழாவில் பிரதம அதிதியாக தேசிய நூலகச் சேவை சபைத் தலைவர் கலாநிதி ரத்னஸ்ரீ விக்கிரமசிங்க அவர்களும் கலந்து கொண்டார். மற்றும் சிங்கள, தமிழ், ஆங்கில இலக்கி\ அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்கள்.

இவ்விழாவில் ஆங்கில சிங்கள தமிழ் மொழிகளில் . சிறந்த பிரதிகள் வழங்கிய எழுத்தாளர்களுக்கு விருநுகள் வழங்கப்பட்டன. தமிழில் சிறந்த ஆக்கப் பிரதிகளில் சம்மாந்துறை சேர்ந்த சித்தி ,ரபீக்கா பாயிஸின் ‘’வளகு வாப்பா போடியின் ஊஞ்சல்’ எனும் சிறுகதைத் தொகுதி பெற்று கொண்டநு, சிறந்த கவிதைப் பிரதிக்கான விருதினை பதுளையை சேர்ந்த கிருஷ்ணசாமி அருளின் காலா தீதமும் சாம்பற்குவியலும் என்ற கவிதைத் தொகுதியும் பெற்றுக் கொண்டது.
இவ்விழாவில் தமிழ் மொழிப் போட்டிக்கு இணைப்பாளராக கடமை ஆற்றிய மேமன்கவியும் கௌரவிக்கப்பட்டார்.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments