Ticker

6/recent/ticker-posts

Ad Code



YouTube தவிர ஏனைய வலைத்தளங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தன


இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram, YouTube மற்றும் x கணக்குகள் நேற்று மாலை சைபர் தாக்குதலுக்கு உள்ளானது.

இதையடுத்து, உத்தியோகபூர்வ Facebook, TikTok, Instagram மற்றும் x கணக்குகள் தற்போது மீண்டும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

எனினும், பொலிஸ் யூடியூப் சேனல் இன்னும் இலங்கை பொலிஸின் கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை.

அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் பணியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சைபர் தாக்குதல் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

tamilmirror




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments