Ticker

6/recent/ticker-posts

Ad Code



" 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்தவும்...அல்லது இடத்தைக் காலி பண்ணவும்" -மஹிந்தவை வெளியேற்ற அரசாங்கம் சதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குற்றச்சாட்டு


மஹிந்த ராஜபக்சவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி.தொலவத்த இன்று தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரது குடியிருப்புக்கு 4.6 மில்லியன் ரூபாய் வாடகை செலுத்த வேண்டும் அல்லது அதை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு ஆணை வழங்கவில்லை என டொலவத்த தெரிவித்துள்ளார்.

"ஜனாதிபதிகள் பொதுவாக முன்னாள் ஜனாதிபதிகளை தனிப்பட்ட முறையில் பழிவாங்க மாட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அவரது இல்லத்தில் இருந்து வெளியேற்ற அரசாங்கம் சதி செய்யும் அதேவேளையில், NPP பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது," என்று அவர் கூறினார்.



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments