துபாய் அனைத்துலக விமான நிலையம் உலகின் ஆகப் பரப்பரப்பான விமான நிலையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
OAG எனும் உலகப் பயணத் தரவு நிறுவனம் அந்தத் தகவலை வெளியிட்டது.
சென்ற 2024ஆம் ஆண்டு சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் ஆகப் பரப்பரப்பான விமான நிலையத்தின் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
அனைத்துலக விமானச் சேவைகளின் விமான இருக்கைகளைக் கருத்தில்கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன.
உலகின் ஆகப் பரபரப்பான 5 விமான நிலையங்கள் என்ன தெரியுமா?
முதல் இடத்தில். ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்துலக விமான நிலையம்
இருக்கைகளின் எண்ணிக்கை: 60,236,220
இரண்டாவது இடத்தில். பிரிட்டனின் ஹீத்ரோ விமான நிலையம் வந்துள்ளது.
இருக்கைகளின் எண்ணிக்கை: 48,358,450
மூன்றாவதாக தென் கொரியாவின் இன்ச்சியோன் விமான நிலையம் இருக்கிறது. அங்குள்ள இருக்கைகளின் எண்ணிக்கை: 41,633,831
நான்காவது இடத்தில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உள்ளது
இருக்கைகளின் எண்ணிக்கை: 41,530,309
நெதர்லந்தின் ஆம்ஸ்டர்டம் ஷிபோல் விமான நிலையம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இருக்கைகளின் எண்ணிக்கை: 39,998,853
nambikkai
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments