27 வயதாகும் ரிங்கு சிங்கிற்கு திருமணமாகவுள்ளதாக செய்தி வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.
ரிங்கு சிங்கின் சிறு வயதிலிருந்தே அவரின் தந்தை சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். ரிங்கு படித்துக்கொண்டும் கிரிக்கெட் பயிற்சி செய்துவிட்டும் அவரின் தந்தைக்கு சிலிண்டர் டெலிவரி செய்ய உதவியும் செய்தார். ரிங்கு படித்துக் கொண்டிருக்கும்போது குடும்ப சூழல் சரியில்லாததால் ரிங்குவை வேலைக்கு செல்ல சொல்லியும் விளையாட்டை விடும்படியும் அவரின் தந்தை கூறினார்.
ஆனால் வீட்டுக்கு தெரியாமல் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ரிங்கு சிங் ஒரு போட்டியில் வெற்றிபெற்று பரிசாக சைக்கிள் வாங்கி வந்து தனது தந்தையிடம் கொடுத்தார். அதுவரை வாடகை சைக்கிள் மூலமே டெலிவரி செய்த அவரின் தந்தைப் பிற்பாடு சொந்த சைக்கிளில் டெலிவரி செய்ய ஆரம்பித்தார். இதுவே அவரின் தந்தை ரிங்குவை கிரிக்கெட்டில் அனுமதிக்க முதல் காரணமானது.
கிரிக்கெட்டில் படிப்படியாக உயர்ந்த ரிங்கு டி20 போட்டிகளின் புதிய ஃபினிஷராக உருவாகி வருகிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியில் விளையாடிய ரிங்கு, ஒரு போட்டியில் அடித்த கடைசி சிக்ஸ் அனைவரையும் இவர் யாரென்று தேடவைத்தது. அதன்பின்னர் இந்திய அணிக்காக அயர்லாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை எதிர்த்து விளையாடினார். இதில் ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடிய ஒரு போட்டியில் ரிங்கு ரோகித் ஷர்மாவுடன் இணைந்து 190 ரன்கள் எடுத்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
தற்போது 27 வயதாகும் ரிங்கு சிங்கிற்கு விரைவில் திருமணமாகவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அதுவும் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்பி பிரியா சரோஜ் என்பவரை திருமணம் செய்ய உள்ளார் ரிங்கு சிங்.
பிரியா சரோஜ் வாரணாசியை சேர்ந்தவர். உத்தரபிரதேசம் மச்லீஸ்வர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பாக எம்பியாக தேர்வு செய்யப்பட்ட இவருக்கு 25 வயதே ஆகும் நிலையில், இளம் எம்பி என்ற பெருமையை பெற்றிருக்கிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை தற்போது எம்எல்ஏ ஆக உள்ளார். ஏற்கனவே மூன்று முறை எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
kalkionline
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments