Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்


காஸாவில் 
ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.

காஸாவில் 2023இல் ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் போர் 15 மாதத்துக்கு பின் முடிவுக்கு வருகிறது.

46,000-க்கும் மேற்பட்ட மக்கள் இந்தப் போரால் கொல்லப்பட்டு காஸாவின் மக்கள்தொகையில் 90% பேர் இடம்பெயர்ந்து தங்கள் வாழ்வாதாரங்களைத் இழந்துள்ளனர்.

இந்நிலையில் ஹமாஸ்-இஸ்ரேல் ஒப்பந்தம் குறித்த அறிவிப்புக்கு பின் காஸாவில் நடந்த தாக்குதலில் 113 பேர் பலியாகியுள்ளனர்.

, கத்தார்,அமெரிக்கா நாடுகளின் சமரச நடவடிக்கைகளால்  ஹமாஸ்-இஸ்ரேல் இடையே இந்தப் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்தப் போர் நிறுத்தம் காஸாவில் ஞாயிறு முதல் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.





 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments