Ticker

6/recent/ticker-posts

Ad Code



தில்லியில் வாக்காளர்களை நீக்கும் பாஜக: கேஜ்ரிவால்


தில்லியில் ஆயிரக்கணக்கான வாக்காளர்களை பாஜக திட்டமிட்டு நீக்குவதாக முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆபரேஷன் லோட்டஸ் என்ற ரகசிய திட்டத்தின் கீழ் இதனை பாஜக செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், டெல்லியில் பாஜகவுக்கு முதல்வர் வேட்பாளர் இல்லை. நம்பிக்கையான வேட்பாளர்கள் இல்லை. எப்பாடுபட்டாவது தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாக்களார் பட்டியலில் திருத்தம் மேற்கொள்வது, வாக்காளர்களை திட்டமிட்டு நீக்குவது போன்ற நேர்மையற்ற வழிமுறைகளை கையாளத் தொடங்கிவிட்டது. இதன் மூலம் பாஜக அதன் தோல்வியை ஏற்கனவே ஏற்றுக்கொண்டுவிட்டது.

எனது புதுடெல்லி தொகுதியில் டிசம்பர் 15-ம் தேதி முதல் 5,000 வாக்காளர்களை நீக்குவதற்கான விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. புதிதாக 7,500 வாக்காளர்களை இணைப்பதற்கு விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 29-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் புது டெல்லியில் செய்த வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் புதிதாக 1 லட்சம் வாக்காளர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்  என்று தெரிவித்தார்.

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments