
புதிய தலைவரை நியமிப்பது குறித்து ஹமாஸின் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசித்து வருவதாகவும், விரைவில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அந்த அமைப்பின் மூத்த அதிகாரி ஒசாமா ஹம்தான் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் (17, 2024 )அன்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அதன் முன்னாள் தலைவர் யாஹ்யா சின்வார் இறந்ததை உறுதிப்படுத்திய பின்னர் அவரது கருத்துக்கள் வந்தன.
மேலும் அவரது அறிக்கையில், ஹமாஸ் இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்தும் போராடும் என்று மீண்டும் உறுதிப்படுத்தினார், இந்த போராட்டத்தை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
காசாவில் இஸ்ரேலிய பயங்கரவாதம் கட்டுக்கடங்காமல் போய்விட்டது.போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளுக்கு பலமுறை முயன்றும் இஸ்ரேல் ஒத்து வரவில்லை .
முற்றுகையிடப்பட்ட பாலஸ்தீனப் பகுதியிலிருந்து ஆக்கிரமிப்புப் படைகள் வெளியேற வேண்டும் என்று ஹமாஸ் பலமுறை வலியுறுத்தியது.எனினும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைகளுக்கு பலமுறை தடைகளை விதித்தது குறிப்பிடத்தக்கது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments