
ஆஸ்திரேலிய நாட்டில் நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை தனது இரண்டாவது குழந்தை பிறப்பின் காரணமாக ரோகித் சர்மா தவற விட்டதால் அவருக்கு பதிலாக இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கேப்டனாக செயல்பட்டிருந்தார். அதேபோன்று ஐந்தாவது போட்டியிலும் பார்ம் அவுட் காரணமாக விலகிய ரோகித் சர்மாவுக்கு பதிலாக பும்ரா கேப்டன்சி செய்திருந்தார்.
இதில் பெர்த் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதினை வென்றதோடு இந்திய அணியை வெற்றிக்கும் அழைத்துச் சென்றார். ஆனால் சிட்னி நகரில் நடைபெற்ற ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டம் காரணமாகவும், இரண்டாவது இன்னிங்ஸின் போது பும்ராவால் பந்துவீச முடியாமல் போனதாலும் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.
ரோகித் சர்மா தற்போது தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் இந்திய அணி அடுத்த டெஸ்ட் கேப்டனை தேர்வு செய்ய வேண்டும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் இம்முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பினை இந்திய அணி தவற விட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவை வெளியேற்றிவிட்டு புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில் தற்போதைய இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் பும்ராவை புதிய கேப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற பல்வேறு கருத்துக்கள் இருந்து வருகின்றன.
இவ்வேளையில் பும்ரா அடுத்த கேப்டனாவது சரியான முடிவுதான் என்று முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : பும்ராவிடம் உண்மையிலேயே தலைமை பண்பு இருக்கிறது. அவரால் ஒரு அணியை கட்டுக்கோப்பாக வழிநடத்தி வெற்றிகளை தேடிக்கொடுக்க முடியும். ஏனெனில் மற்ற பந்துச்சாளர்களின் மீது அழுத்தம் ஏற்படும் போது இவர் பந்தை கையில் எடுத்து விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுக்கிறார்.
மற்ற பவுலர்கள் திணறும்போது இவர் பொறுப்பினை கையில் எடுக்கிறார். அப்படி ஒரு தன்மை இருக்கும் ஒருவர் அணியின் கேப்டனாக இருந்தால் நிச்சயம் ஒவ்வொரு போட்டியிலுமே அவர் நுட்பமாக கவனிக்க வாய்ப்பு உள்ளது என்று சுனில் கவாஸ்கர் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரின் 5 போட்டிகளில் விளையாடிய பும்ரா 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments