
உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் உள்ள தங்கள் தரவு மையங்களில் செயற்கை நுண்ணறிவுக்கான எரிசக்தி, நீர் தரவு நிலையப் பயன்பாட்டிற்கு பிரீமியம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று இயற்கை வள சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமத் கூறினார்.
தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) அனைத்துத் துறைகளிலும் வளர்ந்து வருகின்ற நிலையில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மலேசியாவில் தங்களது தரவு மையங்களை நிறுவுவதற்கு எரிசக்தி, நீர் பயன்பாட்டிற்கு பிரீமியம் கட்டணம் விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக கட்டணம் செலுத்தத் தயாராக உள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவு (AI) அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்பத்துடன் தரவு மையங்களை நிறுவ முற்பட்டால் அதனை மலேசியா பரிசீலிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
நாட்டின் எரிசக்தி மற்றும் நீர் வளங்கள் மீது அரசாங்கம் அதிக கவனம் கொள்வதாக அவர் சுட்டிக் காட்டினார்.
nambikkai

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments