Ticker

6/recent/ticker-posts

Ad Code



செல்லச் சண்டையுடன் புத்தாண்டை வரவேற்கும் பழங்குடியினர்


பெருவில் வாழும் பழங்குடி மக்கள் புத்தாண்டு தொடங்குவதற்குமுன் ஒரு விநோத நடவடிக்கையில் இறங்குகின்றனர்.

ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் வருத்தத்தைப் போக்கிக் கொள்ள அது மிகச் சிறந்த தீர்வு என்பது அவர்களின் நம்பிக்கை.
அது டக்கனாக்குவீ (Takanakuy) திருவிழா. பெருவிலுள்ள சும்பிவில்காஸ் (Chumbivilcas) பகுதியில் நடத்தப்படுகிறது.

டக்கனாக்குவீ என்றால் பழங்குடியினர் மொழியில் அடிதடி என்று பொருள்படும்.

கிறிஸ்துமஸ் நாளில் தொடங்கும் விழா இரண்டு நாள் நடைபெறும்.

ஆண்டு முழுதும் ஒருவர் மீது கொண்டிருந்த கோபத்தை இந்தச் செல்லச் சண்டையின் மூலம் தீர்த்துக்கொள்கின்றனர் பழங்குடி மக்கள்.

பிடித்தவர்கள் மீதுள்ள வருத்தமும் போய்விடுகிறது.

மனத்திலிருந்த காயமும் ஆறிவிடுகிறது.

அதனால் முன்பைவிட நெருக்கமாக அந்நபருடன் பழகமுடிவதாக அவர்கள் நம்புகின்றனர்.

அன்புக்குரியவர்களுடன் அடிதடியில் இறங்குவதால் மிகவும் கவனமாகவே நடவடிக்கை மேற்கொள்கின்றனர்.

பலத்த காயம் ஏற்படும் சாத்தியம் குறைவாகவே உள்ளது.

இம்முறை பெண்களும், பிள்ளைகளும்கூட இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

seithi




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments