Ticker

6/recent/ticker-posts

நைஜீரியாவில் கோழி திருடியவர்களுக்கு மரண தண்டனை


நைஜீரியாவில் சில கோழிகளும் முட்டைகளும் திருடிய ஆடவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை மன்னிக்கப்படவுள்ளது.

2010ஆம் ஆண்டு செகுன் ஓலோவூகெரேயும் மொரகின்யோ சண்டேயும் கைது செய்யப்பட்டனர். அப்போது செகுனுக்கு 17 வயது.

இருவரும் ஒரு காவல்துறை அதிகாரியின் வீட்டைத் தாக்கியதாகவும் கோழி, முட்டைகளை மட்டுமே திருடியதாகவும் பிபிசி செய்தி நிறுவனம் கூறியது.

2014ஆம் ஆண்டு இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தண்டனை கடுமையாய் இருப்பதாக அப்போது நைஜீரியாவில் பலரும் குறைகூறினர்.

நேற்று செகுனுக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ஒருவர் குறிப்பிட்டார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் செகுன் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக பிபிசி சொன்னது.

ஆனால் மொரகின்யோ சண்டேயின் நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

nambikkai




Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments