ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டிற்கு வந்ததில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக வள்ளுவர் தொடங்கி, தமிழ்த்தாய் வாழ்த்து வரை தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறார். மேலும் தமிழ்நாடு சட்டப்பேரவையையும் அவமதித்து வருவதோடு, காவி உடையில் உள்ள வள்ளுவர் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தியும் சர்ச்சையில் சிக்கி கண்டனங்களை பெற்று வருகிறார்.
மேலும் தமிழ்நாட்டில் எந்த அரசு சார்ந்த நிகழ்ச்சிகளிலும் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடியும்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டும் நிறைவடையும். ஆண்டுதோறும் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூட இதுவே மரபாக இருந்து வருகிறது.
ஆனால் இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவையின் முதல் நாளில் ஆளுநர் கலந்துகொண்டு ஆளுநர் உரையினை வாசிப்பார். ஆனால் சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற உப்புசப்பில்லாத காரணத்தை கூறி ஆளுநர் உரையை புறக்கணித்தார். ஆளுநரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.
இந்த சூழலில் நேற்று (ஜன.13) தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் அதிகாரபூர்வ சமூகவலைதள பக்கத்தில் தமிழர்களின் பண்பாட்டு திருவிழாவான பொங்கலுக்கு வாழ்த்து சொல்லாமல், மற்ற மாநில பண்டிகைகளான லோஹ்ரி, மகர சங்கராந்தி, போகலி பிஹு மற்றும் உத்தராயணம் ஆகிய பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து ஆர்.என்.ரவிக்கு கண்டனமும் குவிந்தது.
இந்த நிலையில், தற்போது காவி உடையில் உள்ள திருவள்ளுவர் புகைப்படத்திற்கு ஆளுநர் ரவி மரியாதை செலுத்தியுள்ளது மேலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. இன்று தமிழ்நாடு முழுவதும் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் வள்ளுவருக்கு மரியாதை செலுத்தி, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், காவி நிற உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். ஆளுநர் ரவியின் இந்த செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது.
தமிழர் திருநாள் பொங்கல் பண்டிகைக்கு (ஜன.14) ஆளுநர் வாழ்த்து தெரிவிக்காமல், மற்ற மாநில பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
kalaignarseithigal
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments