எதிர்வரும் ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் பெடரல் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என கனேடியப் (Canada) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லிபரல் கட்சி புதிய தலைவரைத் தெரிவு செய்த உடன் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக கடந்த வாரம் ட்ரூடோ தெரிவித்ததையடுத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த ட்ரூடோ, தனது சொந்த முடிவுகளின் அடிப்படையில் வரவிருக்கும் தேர்தலில் தாம் போட்டியிடவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரசியலை விட்டு வெளியேறிய பிறகு தனது எதிர்காலம் குறித்து நிச்சயமற்ற தன்மையை ட்ரூடோ வெளிப்படுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் நான் என்ன செய்வேன் என்பதைப் பொறுத்தவரையில், அதைப் பற்றி சிந்திக்க தமக்கு அதிக நேரம் இல்லை என்றே ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
கனேடியர்கள் தன்னைத் தெரிவு செய்த வேலையைச் செய்வதில் தாம் முழுமையாக கவனம் செலுத்துவதாகவும் இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமானது என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், டொனால்ட் ட்ரம்பின் வரி அச்சுறுத்தல்களுக்கு கனடா எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பது குறித்து விவாதிக்க கனடாவின் முதல்வர்கள், அமெரிக்காவிற்கான தூதர் மற்றும் சில பெடரல் அமைச்சரவை சகாக்களையும் அவர் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ibctamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments