சீன நிறுவனம் ஒன்று கடும் குறைகூறலுக்கு ஆளாகியுள்ளது.
அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் தன்னம்பிக்கையை வளர்க்கவும் பயத்தைப் போக்கவும் நெருப்பை விழுங்கும் நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அது நியாயமற்ற நடவடிக்கை என்று சீன சமூக ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டது.
எரியும் பஞ்சை வாயில் போட வேண்டும்.
வாயில் போட்டவுடன் தீ அணைந்துவிடும்.
பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அந்தச் சாகசத்தைச் செய்ய இயலும் என்று கூறப்பட்டது.
அந்த நிறுவனத்தில் பணிபுரியும் ரொங்ரொங் எனும் மாது அந்த நடவடிக்கையில் ஈடுபட முதலில் யோசித்தார்.
பிறகு வேலை போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டார்.
அந்த அனுபவத்தைச் சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்ட அவர் அந்த நடவடிக்கை வேலைச் சட்டங்களை மீறியதாகவும் நிறுவனம் மீது வழக்குத் தொடுக்கப்போவதாகவும் கூறினார்.
நிறுவனம் அந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கவில்லை.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments