
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், தனது எக்ஸ் தளத்தின் சுயவிவரப் பெயரை "கெக்கியஸ் மாக்சிமஸ்" என மாற்றியுள்ளார். மேலும், பிரபலமான "பேபே தி ஃபிராக்" மீமின் படத்தையும் தனது சுயவிவரப் படமாக மாற்றியுள்ளார். அந்தப் படத்தில், பேபே தி ஃபிராக் தங்க கவசம் அணிந்து, வீடியோ கேம் கன்ட்ரோலர் ஒன்றை வைத்திருப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது.
"கெக்கியஸ் மாக்சிமஸ்" என்பது என்ன?
"கெக்கியஸ் மாக்சிமஸ்" என்பது ஈத்தேரியம் மற்றும் சோலானா போன்ற பல்வேறு பிளாக்செயின் தளங்களில் இயங்கும் ஒரு மீமால் ஈர்க்கப்பட்ட கிரிப்டோகரன்சி டோக்கன் ஆகும். கிரிப்டோகரன்சி சந்தையில், இந்த டோக்கன் ஒரு குறிப்பிடத்தக்க வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி நிலவரப்படி, "கெக்கியஸ் மாக்சிமஸ்" மதிப்பு சுமார் $0.005667 என இருந்தது. ஆனால் எலான் மஸ்க் தனது பெயரை மாற்றியப்பிறகு, சுமார் 24 மணி நேரத்தில் இந்த பிட்காயினின் மதிப்பு சுமார் 497.56 சதவீதம் உயர்ந்துள்ளது. எக்ஸில் ஒரு பதிவில், எலான் மஸ்க், "கெக்கியஸ் மாக்சிமஸ் விரைவில் ஹார்ட்கோர் PoE-இல் நிலை 80 ஐ எட்டும்" என்று எழுதியிருந்தார்.
முன்னதாக, 2023 இல், எலான் மஸ்க் தனது எக்ஸ் சுயவிவரப் பெயரை "மிஸ்டர் ட்வீட்" என்று மாற்றியிருந்தார். பின்னர், "இப்போது ட்விட்டர் என்னை அதை மீண்டும் மாற்ற அனுமதிக்காது" என்று கூறியிருந்தார்.
டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் "டிபார்ட்மென்ட் ஆஃப் கவர்ன்மென்ட் எஃபிஷியன்சி" (DOGE) ஐ அவர் வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. DOGE முதலில் எலான் மஸ்கால் முன்மொழியப்பட்டது மற்றும் "டோஜ்" என்ற சுருக்கத்தால் அழைக்கப்படுகிறது. இது 'டோஜ்காயின்' கிரிப்டோகரன்சியின் பெயராகும். இந்த திடீர் மாற்றங்கள் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக தற்போது மாறியுள்ளன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments