Ticker

Ad Code



மத்திபாளையம் முதியோர் இல்லத்தில் ஒரு நாள்


கோவை மத்தி பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் இருக்கும் 40 அன்புள்ளங்களுடன் கோவை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் குழுவினருடன் ஒரு சந்திப்பு 09-02-2025 அன்று இனிதே நடைபெற்றது.

நிகழ்வுக்கு கோவை மண்டல டிவிஷனல் எல்.பி.ஜி.சேல்ஸ் தலைமை அதிகாரி திரு வி.வி.கணேஷ் அவர்கள் தலைமை தாங்கினார்.

எல்.பி.ஜி.சேல்ஸ் மேலாளர் திருமதி மாலினி,துணை மேலாளர் மற்றும் எய்ம் தன்னார்வத் தொண்டு நிறுவன நிர்வாக அறங்காவலர் திரு ஆ.திருநாவுக்கரசு வாழ்த்துரை வழங்கினார்கள்.

குறளாசான் தமிழ்ச் செம்மல் முனைவர் மு.க. அன்வர் பாட்சா அவர்கள் நகைச்சுவை கலந்த கலகலப்புடன் முதியோர்கள் உற்சாகமுற சிறப்புரை ஆற்றி அனைவரையும் மகிழ்வித்தார்.

முதியோர் இல்லத்தின் மேலாளர் திரு இரவி மற்றும் திருமதி  கிருஷ்ணவேணி நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர்.

நிகழ்வில் ஒரு பாடல் வசனம் இசைக்கப்பட்டது . அதிலிருந்து கேட்கப்பட்ட வினாவுக்குச் சரியான பதில் சொல்லிய முதியவர் திரு சிவசாமி அவர்களுக்கு நம்முடைய குறள்யோகி தமிழ்ச் செம்மல் முனைவர் அன்வர் பாட்சா அவர்கள் எழுதிய வெற்றியின் இரகசியம் நூல் பரிசளித்து, பொங்கல் வாழ்த்துக்கள் கூறி மகிழ்ந்தனர்.

முதியோர் காப்பகத்தில் உள்ள திருமதி மரகதம்,திரு சிவசாமி,திரு சின்னசாமி உள்ளிட்ட அனைத்துப் பெரியோர்களும் கலந்து கொண்டு மகிழ்வுடன் வாழ்த்துக்களைத் பரிமாறிக் கொண்டனர்.

அனைவருக்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கோவை மண்டலத் தலைவர் திரு வி.வி.கணேஷ் குழுவின் சார்பில் பழங்கள் வழங்கி மகிழ்ந்தனர்.

நிறைவாக நன்றி நவிலலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.



 

Email;vettai007@yahoo.com

Post a Comment

1 Comments