
இஸ்ரோ புதிய தலைவர் வி.நாராயணனின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இஸ்ரோவின் தற்போதைய தலைவராக இருக்கும் சோம்நாத்தின் பதவிக்காலம் அடுத்த வாரத்துடன் முடிவடையவுள்ள நிலையில் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக மாவட்டமான கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.நாராயணன். இவர், வரும் 14-ம் திகதி இஸ்ரோவின் தலைவராக பதவியேற்க உள்ளார். இவர் கடந்த 40 ஆண்டுகளாக இஸ்ரோவில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார்.
இஸ்ரோவில் பல்வேறு திட்டங்களில் சிறப்பாக பணியாற்றியதற்காக பல விருதுகளை பெற்றுள்ளார். இவர், காரக்பூரில் உள்ள ஐஐடியில் படித்து ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்கில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
இவர் சிறந்த மாணவராக விளங்கியது மட்டுமல்லாமல் சில்வர் மெடலும் பெற்றுள்ளார். மேலும், ஆஸ்ட்ரோனேட்டிக்கல் சொசைட்டி ஆப் இந்தியாவின் கோல்டு மெடல் வாங்கியுள்ளார்.
இதனிடையே, கடந்த 2023-ம் ஆண்டில் RPG என்டர்பிரைசஸ் தலைவர், இஸ்ரோ சேர்மன் சோமநாதனின் சம்பளம் குறித்து தனது ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.அவர் தனது பதிவில்,"சோமநாதன் மாத வருமானமாக ரூ. 2.5 லட்சம் பெற்று வருகிறார்" என்று கூறியிருந்தார்.
இதனடிப்படையில், இஸ்ரோவின் புதிய தலைவராகும் வி நாராயணனுக்கு இந்த சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், விண்வெளி ஏஜென்சியின் தலைவரின் சம்பளம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை இஸ்ரோ வெளியிடவில்லை.
lankasri

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments