ஐக்கிய அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் தெற்கில், லோஸ் ஏஞ்சலூஸ் பகுதியைச் சுற்றியுள்ள மலைக்காடுகளில் கட்டுக்கடங்காமல் தொடர்ந்து கொண்டிருக்கும் காட்டுத் தீ, இதுவரை பல இடங்களுக்குப் பரவி சுமார் 36,000 ஏக்கர் நிலப்பரப்பை துவம்சம் செய்துவிட்டது.
இதனால் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். பலர் காயமடைந்தனர் மற்றும் காணாமற் போனோரின் தொகை இதற்கும் மேலானதாகும்.
மரணமடைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நகரின் வடக்குப் பகுதி ஈட்டன் காட்டுத் தீயின் தாக்கத்தில் சிக்கியவர்களே.
பல ஆயிரம் ஏக்கர் பெருநிலப்பகுதி தீயால் அழிந்துள்ள நிலையில், 12 ஆயிரம் வணிக கட்டடங்களும், 30 ஆயிரம் குடியிருப்புககளும் கருகிப்போய்விட்டன. இதனால் இதுவரை சுமார் 57 பில்லியன் டொலர் மதிப்பிலான சொத்துக்களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், தீ பரவும் பகுதிகளிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் பேர் வரை வெளியேற்றப் பட்டுள்ளனர்.
இத்தீயை அணைக்க தீயணைப்பு படைக்குழுவினர் கடுமையாக போராடி வருகின்ற நிலையில், ஜோபைடன் இந்நிகழ்வை தமது நாட்டின் பேரிடர் ஒன்றாக அறிவித்துள்ளார்.
லோஸ் ஏஞ்சலூஸில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு பலத்த காற்றும், வறண்ட வானிலையுமே காரணம் எனக் கூறப்படுகின்றது.
இக்காட்டுத் தீ ஏற்பட்டவுடன் சுமார் 70 கிலோ மீற்றர்களைத் தாண்டி சுமார் 130 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் 'சாண்டா அன்னா' என்ற பெயரிலான காற்று வீசத் தொடங்கியதனால் தீ வேகமாகப் பரவத் தொடங்கியது.
காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வேறு விடுத்துள்ளது.
அதனால், லோஸ் ஏஞ்சலூஸ் பிரதேசத்தில் ஏற்பட்டிருக்கும் காட்டுத் தீ கலிபோர்னியா மாகாணத்தின் மேலும் பல பகுதிகளுக்குப் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நகரின் மேற்கு பகுதியில் உருவான பெரிய அளவிலான பாலிசேட்ஸ் காட்டுத் தீயால் 23,000க்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. மேலும், காட்டுத் தீயை உண்டாக்கியதாக கூறப்படும் 'சாண்டா அன்னா' காற்று சற்றுத் தனிந்த போதிலும், ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் உருவாகலாம் என்ற தகவல் கூட அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காட்டுத் தீ பரவும் பகுதிகளில் வசித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப் படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்த இக்கட்டான நிலையைப் பயன்படுத்தி லோஸ் ஏஞ்சலூஸ் நகரில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதை மையமாகக் கொண்டு, தீ பரவும் இடங்களில் ஊரடங்குச் சட்டம் அமுல் செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் 20க்கும் மேற்பட்ட திருடர்களும் கைது செய்யப்பட்டும் உள்ளனர். திருட்டுகளைத் தடுக்க அமெரிக்க தேசிய படையை சேர்ந்த வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத் தக்கது.
இந்நிலையில், கலிபோர்னியா மாகாணத்திலிருந்து இது, தலைநகர் நியூயார்க் வரை தீ பரவி வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி ஒன்று பரவி வருவது உண்மைக்குப் புறம்பானது என அறிய முடிகின்றது. சமூக வலைத்தள பதிவுகளில் தீ நியூயார்க்கிலும் பரவியதாக வெளியான பதிவுகளை ஆராய்ந்தபோது, நியூயார்க்கில் தற்போது தீ விபத்து ஏற்பட்டதான தகவலில் உண்மை தன்மை கிடையாது என்பது ஊர்ஜிதமாகியுள்ளது.
கலிபோர்னியா தீ நியூயார்க்கிற்கு பரவுவது ஒருபோதும் சாத்தியமில்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் இரண்டுமே கடலோர மாநிலங்கள்; இவை நாட்டின் எதிர் எதிர் முனைகளில் அமைந்துள்ளன. கலிபோர்னியாவிலிருந்து நியூயார்க்கிற்குச் செல்ல, பல மாநிலங்களைக் கடக்க வேண்டும். கலிபோர்னியாவின் லோஸ் ஏஞ்சலூஸ் மற்றும் நியூயார்க் நகரத்திற்கு இடையே உள்ள சாலைவழித் தூரம் 2,792 மைல்களாகும்.
லோஸ் ஏஞ்சலூஸ் நகரின் மத்தியில்தான் 'ஹொலிவுட்' பகுதி அமைந்துள்ளது. இங்கு உலகின் முன்னணி திரைப்பட நிறுவனங்களும், திரைப்பட நகரங்களும் அமைந்துள்ளன. அதனால் நீண்டகாலமாக லோஸ் ஏஞ்சலூஸ், பிரசித்திபெற்ற திரையுலகத் தலைநகராக விளங்கி வருகின்றது.
2025, ஜனவரி 7ம் தேதி லோஸ் ஏஞ்சலூஸிலுள்ள மலைப்பகுதியான 'பாலிசேட்ஸ்' டில் காட்டுத் தீ ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றி எரியும் பைன் மரங்களால் இக்காட்டுத் தீ அதிவேகமாக பரவியது. தற்போது பாலிசேட்ஸ், ஈட்டன், ஹர்ஸ்ட், லிடியா ஆகிய பகுதிகளிலும் கட்டுக்கடங்காமல் தீ பரவி துவம்சம் செய்து வருகின்றது.
சுமார் ஒரு கோடி பேர் வசிக்கின்ற லோஸ் ஏஞ்சலூஸ் நகரப் பகுதிகளிலிருந்து சுமார் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றப் பட்டுள்ளனர்.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸும் லோஸ் ஏஞ்சலூஸில் வாழ்பவர். தற்போது அவர் தனது வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்; அவரது வீட்டுப் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களையும் உடனடியாக வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
லோஸ் ஏஞ்சலலூஸ் காட்டுத் தீ தொடர்பாக சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோக்கள், புகைப்படங்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், இத்தீ விபத்தில் இதுவரை 50 பில்லியனுக்கும் அதிகமான டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதும், இந்தத் தொகையை இந்த மாகாணம் ஈட்டுவதற்கு சுமார் 21 ஆண்டுகள் எடுக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் ஹேஸ்யம் கூறிவருகின்றனர்.
அமெரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள் உள்ளன. இவற்றில் கலிபோர்னியா மாகாணம் தனித்துவமானது.
இந்த மாநிலத்தின் கடற்கரை ஓரத்தில்தான் அனைத்து புகழ் பெற்ற நகரங்களும் உள்ளன. இந்த மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளதுதான் லோஸ் ஏஞ்சலூஸ்.
இங்குள்ள சாண்டியாகோவில் உலகப் புகழ் பெற்ற கடல் உலகம் உள்ளது.இந்த நகரத்திலிருந்து சுமார் 120 மையில் தூரத்தில் உலகப் புகழ் பெற்ற 'ஹோலிவுட்' நகரம் அமைந்துள்ளது.
அதிகப் பணம் சம்பாதித்தவர்கள் உலகின் எந்தப் பகுதியில் பிறந்தாலும், தெற்கு கலிபோர்னியா பகுதியில் வீடு வாங்கி வாழ்வது மிகச் சாதாரணமாக நிகழ்வாகும்.
உலக அளவிலான வர்த்தகத்திற்கும் அமெரிக்க வர்த்தகத்திற்கும் கலிபோர்னியா ஒரு சொர்க்க பூமியாகக் கொள்ளப்படுகின்றது.
திரைத்துறை முதல் கணினி மற்றும் கணினி மென்பொருள் தொழில்நுட்பத்திற்கு கலிபோர்னியா தலை சிறந்து விளங்குகின்றது.
இங்கு மொத்தமாக 23 பல்கலைக் கழகங்கள் உள்ளன. அவற்றுள் சென்பிரான்ஸ்சிஸ்கோ பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக் கழகம் மற்றும் இர்வான் பல்கலைக் கழகம் உலக பல்கலைக் கழகங்களில் முதலிடத்தில் உள்ளனவாகும். எனவே உயர் கல்விக்கு மட்டும் அல்ல ஆராய்ச்சிக்கும் கலிபோர்னியா ஒருசிறந்த இடமாக விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியாவில் ஆண்டுதோரும் காட்டுத்தீ ஏற்பட்டு வருவது வழக்கமாகும். இப்பகுதி அதிகமான மலைக் குன்றுகளைக் கொண்டதாகும். இங்கு வளரும் தாவரங்கள் கோடைக் காலத்தில் கருகி சருகாகக் காட்சி தருவதால் சிறியதொரு தீப்பொறி பட்டாலும், தீ பரவத் தொடங்கிவிடும்.
இத் தீ விபத்துத் தாக்கம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகின்றபோதிலும், அரசு தீயணைக்கும் படைக்கான பண ஒதுக்கீட்டில் கஞ்சத்தனம் பண்ணி வருகின்றது. அத்துடன் இங்குள்ள ஏரிகளில் தண்ணீரைச் சேமிக்கவும் அரசு தவறிவிட்டது.
அதனால் காப்பீட்டு நிறுவனங்கள் கூட இந்தப் பகுதியில் தீ விபத்துக்கான காப்பீடுகளை ரத்துச் செய்துள்ளன.
இந்நிலையில்தான் புதுவருடத் தொடக்கத்தில், லோஸ் ஏஞ்சலூஸ் பகுதியின் மூன்று இடங்களில் தீ பரவத் தொடங்கி, அதிக சக்திவாய்ந்த காற்று வீச ஆரம்பித்ததால் லோஸ் ஏஞ்சலூஸ் நகரம்பற்றி எரிய ஆரம்பித்தது.
'பலசைடு டவுன்டவுனி'லிருந்த வானளாவிய கட்டடங்கள் ஒன்று கூட இல்லாமல் அத்தனையும் எரிந்து கரிக்கட்டையாக நிற்கின்றது.மலைக்குன்றின் மேல் 'ஹோலிவுட்' எனப் பெரிய எழுத்தில் எழுதப்பட்ட பகுதியில் பிரபலங்கள் பல லட்சம் டாலரில் கட்டியிருந்த சொகுசு பங்களாக்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகி விட்டன.
இந்தப் பகுதியிலிருந்த பேரீச்ச மரங்கள், பனை மரங்கள் எரிந்த நிலையில் காற்று அவைகளை அங்குமிங்குமாக ஆட்டிக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பயங்கரமான காட்சியாக உள்ளது.100 அடிக்கும் மேல் வளர்ந்திருந்த எண்ணெய் சத்து நிறைந்த பைன் மரங்களும், யூக்கலிப்டஸ் மரங்களும் எரிந்துள்ளதைக் காணமுடிகின்றது.
மக்கள் உயிருக்குப் பயந்து தமது வாகனங்களையும், உடைமைகளையும் அப்படியே விட்டுவிட்டு ஓடுவதையும், கார்கள் எரிந்து உருகிவரும் காட்சியையும் பார்க்க முடிவதால் கூறப்படுகின்றது.
வரிசையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக் கணக்கானக் கார்கள் ஒவ்வொன்றாக எரியும் காட்சியின் கோரத்தாண்டவம் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கின்றது. வாகனங்களில் நிரப்பி வைக்கப்பட்டுள்ள எரிபொருள்களும், காற்று நிரம்பியுள்ள டயர்களும் சத்தத்துடன் வெடிப்பதையும், வாகன இருக்கைகள் மற்றும் டயர்கள் எரிவதால் வெளிவரும் கரிய புகை மண்டலமும் மனதைக் கலங்கடிக்கும் காட்சியாக உள்ளது.
இருந்தபோதிலும், ஒரு சந்தோசமான செய்தி உயிரிழப்புக்கள் பெரிதும் கட்டுப் படுத்தப் பட்டுள்ளமையாகும்.
12 ஆயிரம் வீடுகள் மற்றும் கடைகள் எரிந்து சாம்பலாகியுள்ளன. மேலும் 1 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டுள்ளனர். அடுத்து வரும் நாட்களில் 2 லட்ச மக்கள் வேறு இடத்திற்குக் கொண்டு செல்லப் படுவார்கள்.
இந்நிகழ்வைப் பார்க்கும்போது ஒரு போர்க்களத்தை விடப்படு பயங்கரமாக உள்ளது.
கலிபோர்னியாவில் நிலநடுக்கம் வர வாய்ப்பு அதிகம் என்பதால், இங்குள்ள வீடுகள் பெரும்பாலும் மரங்களினால் கட்டப்பட்டுள்ளன. அதனால் இத்தீ வேகமாகப் பரவ மரவீடுகள் நல்ல வாய்ப்பை அமைத்துக் கொடுக்கின்றது எனலாம்.
சிலர் இந்தத் தீவிபத்து இயற்கையானது இல்லையென கூறுகின்றனர்.
சக்திவாய்ந்த லேசர் கதிர்களால் இந்தத் தீவிபத்து ஏற்படுத்தப் பட்டுள்ளதாகவும் சிலர் சந்தேகப்படுகின்றனர். விசமிகள் தீயைப் பற்றவைத்துள்ளனர் எனவும் கூறுகின்றது.
சிலர் இதனைப் பயன்படுத்தி வீடுகளிலும் கடைகளிலும் கொள்ளை அடித்தும் வருகின்றனர்.
உலகின் பிற பகுதிகளில் அமெரிக்க ஆயுதங்களை வைத்து இராணுவத்தைக் கொண்டு அழித்த இடங்களை எரிந்து கொண்டிருக்கும் லோஸ் ஏஞ்சலூஸ் பகுதியை இணைத்து இணையதளத்தில் பலரும் பேசி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எப்போதோ முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டிய இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தத்தை 15 மாதங்கள் வரை நீடிக்கச் செய்ததில் அமெரிக்காவின் வகிபாகம் முக்கியமாக இருந்துள்ளது என்பதும், இயற்கையின் சீற்றம் ஒன்றுதான் அனைவருக்கும் அவ்வப்போது பாடம் கற்பிக்கின்றது என்பதும் வரலாறு கண்ட உண்மையாகும்.
செம்மைத்துளியான்
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments