இந்தோனேசியாவில் இபு (Ibu) எரிமலை வெடித்ததற்குப் பிறகு ஆயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேற மறுத்துவிட்டனர்.
தொலைதூர தீவான ஹல்மஹெரா (Halmahera) தீவில் எரிமலை அமைந்துள்ளது.
எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து அங்கு 14 நாள் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிமலை எச்சரிக்கை நிலையும் ஆக அபாயமிக்க நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
எரிமலையின் 5 கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யும்படி குடியிருப்பாளர்களுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபாயமிக்க வட்டாரத்தில் உள்ள 6 கிராமங்களில் வசிக்கும் குறைந்தது 3000 பேர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
இருப்பினும் 600க்கும் குறைவானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.
எரிமலை வெடிப்புச் சம்பவங்கள் தங்களது பழகிவிட்டதாகவும் எரிமலை நடவடிக்கைகள் கூடிய விரைவில் தணியும் என்று நம்புவதாகவும் அவர் கூறினர்.
இந்தோனேசியாவில் பல முறை வெடித்துள்ள எரிமலைகளில் இபு (Ibu) எரிமலையும் ஒன்று.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments