Ticker

6/recent/ticker-posts

கொல்கத்தா மருத்துவர் பாலியல் வன்கொடுமை - காவல்துறைத் தொண்டூழியர் குற்றவாளி என்று தீர்ப்பு


இந்தியாவின் கொல்கத்தா நகரில் இளம் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில், காவல்துறைத் தொண்டூழியர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சஞ்ஜே ராய் (Sanjay Roy) என்பவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை நிராகரித்து, தமக்கு எதிராகச் சதி நடப்பதாகக் கூறியிருந்தார்.

புலனாய்வில் குறைபாடுகள் இருந்ததாக அவரின் வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

ஆனால் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சந்தர்ப்பச் சூழ்நிலை தரும் ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது ராய் குற்றவாளி என்பது நிரூபணமாகியிருப்பதாகக் கூறினார்.

ராய்க்கு நாளை தண்டனை வழங்கப்படும்.

அவருக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம்.

seithi




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments