Ticker

6/recent/ticker-posts

உலகின் அதி சக்திவாய்ந்த இராணுவங்களின் பட்டியல்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா!


2025 ஆம் ஆண்டுக்கான மிகவும் சக்திவாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பட்டியலை சுமார் 145 நாடுகளின் இராணுவங்களுடைய பலம் மற்றும் பலவீனம் என்பவற்றை ஆராய்ந்து குளோபல் ஃபையர்பவர் (Global Firepower) என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

அதன் அடிப்படையில், 2005 முதல் மிகவும் வலிமை வாய்ந்த இராணுவ படைகளை கொண்ட நாடாக அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அத்தோடு, ஒரு வருடத்திற்கு மாத்திரம் அமெரிக்கா தனது இராணுவத்திற்கு 750 பில்லியனுக்கும் அதிகமான டொலர்களை ஒதுக்குவதாக கூறப்படுகிறது.


இதேவேளை, அமெரிக்காவிற்கு அடுத்தப் படியாக உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களை ரஷ்யாவும் சீனாவும் பெற்றுள்ளன.

இந்திய இராணுவம்

அதையடுத்து, வலிமையான இராணுவத்தை கொண்ட நாடுகளில் நான்காவது இடத்தை இந்தியா பெற்றுள்ளது.

2023 இல் தென் கொரியாவை விட முன்னணியில் இருந்த பிரித்தானியா தற்போது பின் தங்கியுள்ள நிலையில் ஐந்தாவது இடத்தில் தென்கொரியாவும் ஆறாவது இடத்தில் பிரித்தானியாவும் இருக்கின்றன.

பத்தாவது இடம்

மேலும், வெளிவந்துள்ள சக்திவாய்ந்த இராணுவ பட்டியலின் படி பிரான்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் 7 மற்றும் 8 ஆம் இடங்களை பிடித்துள்ளன.

அத்துடன், 9 ஆவது இடத்தில் இருந்த பாகிஸ்த்தான் பெரும் பின்னவை சந்தித்துள்ள நிலையில், அந்த இடத்திற்கு துருக்கி முன்னேறியுள்ளது.

எவ்வாறாயினும், எப்போதும் போலவே பத்தாவது இடத்தை இத்தாலி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ibctamil




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments