
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் என்பதற்காக யோஷித ராஜபக்ச கைது செய்யப்படவில்லை என்றும் யார் சட்டவிரோதமாக அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நிலங்கள் அல்லது சொத்துக்களை வாங்கியிருந்தாலும் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
சிலர் கூறுவது போல் சமீபத்திய கைதுகளுக்குப் பின்னால் எந்த அரசியல் பழிவாங்கல்களும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடந்த சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அமைச்சர் கூறியதாவது, “யாராவது சட்டவிரோதமாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் நிலங்கள் அல்லது சொத்துக்களை வாங்கியிருந்தால், அத்தகைய வழக்குகளில் சி.ஐ.டி விசாரணைகள் நடத்தப்பட்டடு சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதாகவும், யோஷித மகிந்த ராஜபக்சவின் மகன் என்பதால் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ளார்.
மேலும், விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சிஐடி மற்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் அறிக்கைகளை சமர்ப்பித்து அதற்கேற்ப கைதுகளை மேற்கொள்வார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பிணை வழங்கப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், “அவர்களுக்கு பிணையில் செல்ல கிடைக்கும். ஆனால், வழக்கு தொடரும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நீதித்துறையின் கடமை. அரசாங்கம் அதை எளிதாக்குகிறது.” என தெரிவித்தார்.
ibctamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments