இணைய மோசடிகளுக்கு முக்கிய தேர்வுகளாக நான்கு சமூக ஊடக தளங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை தெரிவித்தார்.
முகநூல், டிக்டாக், வாட்ஸ்ஆப், டெலிகிராம் ஆகியவற்றில் மில்லியன் கணக்கான ரிங்கிட் மோசடி நடந்துள்ளது.
2023ஆம் ஆண்டில் முகநூல் மூலம் மட்டும் மோசடி செய்யப்பட்ட தொகை 500 மில்லியன் ரிங்கிட்டாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரை, சமீபத்திய மோசடிகள் இன்னும் கணக்கிடப்படவில்லை. ஆனால் ஒட்டு மொத்தமாக இந்த எண்ணிக்கை மிகப் பெரியது.
வணிக குற்றப் புலனாய்வுத் துறையின் தகவலின்படி, சமூக ஊடகங்கள் மூலம் கிட்டத்தட்ட 14 வகையான மோசடிகள் செய்யப்படுகின்றன.
அதைத் தவிர, தொலைபேசி அழைப்புகள், நேருக்கு நேர் சந்திப்புகள் போன்ற மோசடி குற்றங்களும் உள்ளன.
தும்பாட்டில் நடந்த இஹ்சான் மடானி நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மக்களிடையே நான்கு சமூக ஊடகங்கள் மோசடி செய்வதற்கு முக்கிய ஊக்கமாக இருந்தது
ஏனெனில் பல பயனர்கள் எளிதில் ஏமாற்றப்பட்டனர் என்று ஃபஹ்மி கூறினார்.
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments