Ticker

6/recent/ticker-posts

முதல் விண்வெளி பயணத்திற்குத் தயாராகும் New Glenn உந்துகணை


Blue Origin நிறுவனத்தின் New Glenn உந்துகணை அதன் முதல் விண்வெளி பயணத்திற்குத் தயாராகிவிட்டது.

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தின் கேப் கனாவரேல் நிலையத்திலிருந்து அது இன்று விண்ணில் ஏவப்படும்.

சுமார் 100 மீட்டர் உயரம் அதாவது 32 மாடிக் கட்டடத்திற்குச் சமமாய் உந்துகணை நிற்கிறது .

துணைக்கோளங்களை விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் அது உலகிலேயே ஆகச் சக்தி வாய்ந்த உந்துகணையாகக் கூறப்படுகிறது.

செல்வந்தர் இலோன் மஸ்கின் SpaceX நிறுவனத்தின் Falcon 9 உந்துகணையைவிட இது ஒரு மடங்குக்கும் மேல் ஆற்றல்மிக்கது.

New Glenn உந்துகணைச் சோதனை வெற்றி அடைந்தால் அது SpaceX நிறுவனத்திற்குக் கடும் போட்டியாய் மாறலாம்.

உந்துகணை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுக்குப் பிறகு அமேசன் நிறுவனர் ஜெஃப் பெஸொஸின் Blue Origin நிறுவனம் முதல் விண்வெளிப் பயணத்துக்குத் தயாராகிறது.

nambikkai




 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments