Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஐபிஎல் 2025: சென்னையில் 7.. மும்பையுடன் வேட்டையை துவங்கும் சிஎஸ்கே அணியின்.. முழு அட்டவணை இதோ


ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி துவங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் துவங்கும் இந்தத் தொடர் மே 25ஆம் தேதி அதே நகரில் முடிவடைகிறது. பிளே ஆப் சுற்றின் குவாலிபயர் ஒன்று மற்றும் எலிமினேட்டர் போட்டிகள் ஹைதராபாத் நகரில் மே 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

குவாலிஃபயர் 2 மற்றும் ஃபைனல் போட்டிகள் மே 23 மற்றும் 25 தேதிகளில் கொல்கத்தாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் 5 கோப்பைகளை வென்ற வெற்றிகரமான சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியை பரம எதிரி மும்பைக்கு எதிராக விளையாட உள்ளது. 5 கோப்பைகளை வென்ற மும்பைக்கு எதிராக சென்னை தங்களுடைய சொந்த மண்ணில் மார்ச் 23ஆம் தேதி 6வது கோப்பையை வெல்லும் வேட்டையை துவக்குகிறது.

அதே போல இரண்டாவது போட்டியில் மற்றொரு பரம எதிரியான பெங்களூருவை மார்ச் 28ஆம் தேதி சென்னை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியும் சென்னையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் சென்னை தங்களுடைய சொந்த ஊரில் 7 போட்டிகளையும் வெளியூரில் 7 போட்டிகளையும் விளையாடுகிறது.

சென்னை அட்டவணை: 

ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முழுமையான அட்டவணை (* குறியிட்ட போட்டிகள் மதியம் 3.30, மற்ற அனைத்தும் இரவு 7.30 மணிக்கு துவங்கும்): 1. மார்ச் 23: சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ், சென்னை 2. மார்ச் 28: சென்னை சூப்பர் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சென்னை 3. மார்ச் 30: ராஜஸ்தான் ராயல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், கௌகாத்தி 4. ஏப்ரல் 5: சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ், சென்னை*

சென்னையில் 7 போட்டிகள்: 

5. ஏப்ரல் 8: பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், முள்ளான்பூர் 6. ஏப்ரல் 11: சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை 7. ஏப்ரல் 14: லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ 8. ஏப்ரல் 20: மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை 9. ஏப்ரல் 25: சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை

10. ஏப்ரல் 30 சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ், சென்னை 11. மே 3: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூரு 12. மே 7: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா 13. மே 12: சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை 14. மே 18: குஜராத் டைட்டன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ், அகமதாபாத்*

crictamil

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments