
27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் ஆட்சிக்கு வந்ததைப்போல் 2026-இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று அண்ணாமலை பேசினார்.
கோவையில் 1998-ஆம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்தது. அப்போது உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு அண்ணாமலை மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மேடையில் பேசிய அவர், 2026-இல் தி.மு.க. தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்படும் என்றார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, திமுகவின் வாக்கு வங்கி சரிந்து வருவதாகக் கூறினார்.
தமிழகத்தில் நடக்கும் தவறுகள் திருத்த முடியாத அளவிற்கு சென்றுவிட்டதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். இந்த நிகழ்ச்சியில் வானதி சீனிவாசன், தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments