
8 வருடங்களின் பின்னர் நடத்தப்படவுள்ள செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் தொடரின் வெற்றியாளர்களுக்கான பரிசு விபரங்களை ICC அறிவித்துள்ளது.
இதற்கமைய தொடரின் கிண்ணத்தை கைப்பற்றும் அணிக்கு 2.24 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும். இது இலங்கை பெறுமதியில் 65 கோடி ரூபாவுக்கும் அதிகமாகும்.
அத்துடன் தொடரின் ஒவ்வொரு கட்டங்களுக்கும் வழங்குவதற்கென 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 203 கோடி ரூபாவாகும்.
இறுதியாக இங்கிலாந்தில் இடம்பெற்ற செம்பியன்ஸ் கிண்ண தொடருக்கென ஒதுக்கப்பட்ட பரிசுத் தொகையை விடவும் இது 53 வீத அதிகரிப்பாகும்.
தொடரில் 2ம் இடத்தை பெறும் அணி 1.12 மில்லியன் அமெரிக்க டொலரை பரிசாக பெறும். இதேவேளை தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு தலா 125000 அமெரிக்க டொலர் வழங்கப்படும். எதிர்வரும் 19ம் திகதி தொடர் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
itnnews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments