
இந்நிலையில், உச்சநீதிமன்ற உத்தரவை அடிப்படையாக வைத்து, கருணைக்கொலைக்கு கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கடந்த ஜனவரி 30ம் தேதி அனுமதி அளித்தது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து கர்நாடகா மாநிலத்தில் ஓய்வு பெற்ற ஆசிரியரான எச்.பி. கரிபசம்மா (85), கருணைக்கொலை செய்யப்பட இருக்கிறார்.
கர்நாடகா மாநிலம், தாவணகெரே பகுதியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் தனது கணவருடன் கரிபசம்மா வசித்துவருகிறார். இவர் முதுகுத் தண்டுவடம் பிரச்சனையின் காரணமாக கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இன்னல்களை சந்தித்துவருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவருக்கு புற்றுநோயும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முதுகுத் தண்டுவடம் பிரச்சினை காரணமாக அசைய முடியாமல் இருக்கும் கரிபசம்மா, கடந்த 24 வருடங்களாக கண்ணியமான மரண உரிமைக்காக போராடி வருகிறார். இது தொடர்பாக அவர் முதலமைச்சர், பிரதமர், குடியரசுத் தலைவர் மற்றும் உச்சநீதிமன்றம் என பல்வேறு தரப்பிலும் மனுக்கள் கொடுத்திருந்தார்.
இந்நிலையில், கர்நாடகா அரசு கடந்த ஜனவரி 30ம் தேதி கண்ணியமான மரண உரிமைக்கு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து இவர் மரணிக்கப்பட இருக்கிறார். கண்ணியமான மரண உரிமையில் கர்நாடகா அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ், ‘உயிர் காக்கும் கருவியுடன் சிகிச்சை பெறுவோரும், உயிர் காக்கும் சிகிச்சைக்கும் ஒத்துழைக்காதவர்களுக்கு மட்டுமே கண்ணியமான மரண உரிமை அடிப்படையில் மரணிக்க அனுமதிக்கப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார்.
குழந்தைகள் அற்ற கண்ணியமான மரண உரிமை அடிப்படையில் மரணிக்க இருக்கும் கரிபசம்மா, “இந்த உரிமையைப் பெற பலர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். ஆனால் நான் கர்நாடகாவில் முதல் நபராக இருக்க விரும்புகிறேன்.
நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான முதியோர் நோய்களை எதிர்கொள்கின்றனர். என்னைப் போலவே, அவர்களும் ஒரு கண்ணியமான மரணம் இல்லாமல் துன்பங்களைத் அனுபவிக்கிறார்கள். இதைத் தீர்ப்பதற்கு ஒரு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நான் வாதிடத் தொடங்கியபோது, அது பரவலான அதிர்ச்சியை சந்தித்தது. மெல்ல மெல்ல என் குடும்பத்தாரும், உறவினர்களும் என்னைவிட்டு ஒதுங்கினர்” எனத் தெரிவித்தார்.
கண்ணியமான மரணத்திற்கான போராட்டத்தில் இவர், தனது குடும்ப உறவுகள் மட்டுமின்றி, கடந்த 20 வருடங்களில் அவரது வீடு, நிதி உள்ளிட்ட அனைத்தையும் இழந்திருக்கிறார். இறுதியாக அவரது சேமிப்பில் இருந்த ரூ. 6 லட்சம் பணத்தையும் அவர், எல்லை பாதுகாப்பு படைக்கு கொடுத்துவிட்டார்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments