
ஐசிசி சாம்பியன்ஷிப் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். இந்திய அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முதுகு பகுதியில் ஏற்பட்ட தசைப் பிடிப்பால் பாதிக்கப்பட்ட பும்ரா தொடர் சிகிச்சையில் இருந்து வருகிறார். பெங்களூரு தேசிய கிரிக்கெட் மையத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இன்னும் ஒரு வாரத்தில் பூரண குணமடைய வாய்ப்பில்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதேபோல் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் ரிசர்வ் வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ், ஷிவம் துபே இடம் பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் அவர்கள் துபாய் செல்வார்கள் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments