Ticker

6/recent/ticker-posts

உலகின் மிக உயரமான நீர் எருமை


தாய்லாந்தைச் சேர்ந்த 3 வயது நீர் எருமை, உலகின் மிக உயரமான நீர் எருமை என்ற கின்னஸ் சாதனையில் இடம்பெற்றுள்ளது.

தாய்லாந்தில், நக்கோன் ராட்சசிமாவில் என்ற இடத்தில் உள்ள நின்லானீ பண்ணையில் ஒரு நீர் எருமை வாழ்ந்து வருகிறது. 3 வயதில் வழக்கமாக ஒரு நீர் எருமை இருக்கும் உயரத்தைவிட, 20 அங்குலம் உயரமாக உள்ளது. தற்போது, 6 அடி, 8 அங்குல உயரம் கொண்டதாக அறியப்படுகிறது.

அதன் உரிமையாளர் இந்த நீர் எருமைக்கு ’கிங் காங்’ எனப் பெயரிட்டுள்ளார். ஒரு நாளைக்கு சுமார் 35 கிலோ உணவை உட்கொள்வதாகவும், குறிப்பாக வைக்கோல், சோளம், வாழைப்பழங்களை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறப்படுகிறது.

கிங் காங் உரிமையாளர் சுசார்ட் பூஞ்சாரோன் என்பவர் கூறுகையில், “இயற்கையில் ராட்சத விலங்குகள் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஆனால் இந்த நீர் எருமை மிகவும் சாதுவாக இருக்கும். குளத்தில் வளர்ப்பவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

nambikkai

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments