
தமது மூன்றாம் குழந்தையான ஔவையை, அதே போல குழந்தைப் பேறின்றி இருந்த, யாழ் இசைத்து, இசைக்கலையை வளர்த்துக் கொண்டிருந்த ஒரு பாணர் குடும்பத்திற்குத் தாரை வார்த்து கொடுத்து அவர்களையும் வாழ்த்தி அருளினர். இவ்வாறு தமது இருகுழந்தைகளையும் தாரை வார்த்துக் கொடுத்த ஆதியும் பகவனும், அவ்வூரை விட்டும் பிரிந்து வேற்றூருக்குப் பயணத்தைத் தொடங்கினர்.
வழியில் எவ்வித ஊரும் அவர்களுக்குப் புலப்படவில்லை. ஆதியும் பகவனும் பயணம் செய்த வழி. காடும் மலையுமாகவே காணப்பட்டது. அம்மலைப் பகுதியிலே, ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து, சாலையமைத்து அங்கு சிறிது காலம் தமது வாழ்க்கையைக் கழித்தனர் ஆதியும் பகவனும்.
இந்த மலைச்சாரலிலேயே வாழ்க்கை நடத்தியதில், ஆதிக்கும் பகவனுக்கும் ‘வள்ளி” எனும் நான்காம் குழந்தை பிறந்தது. இக்குழந்தையையும், தமது மூன்று குழந்தைகளைத் தாரை வார்த்துக் கொடுத்ததைப் போல, குழந்தை இல்லாது வெகு காலமாக வாடிக் கொண்டிருந்த, அந்த மலைச் சாரலின் தலைவன் ஒருவனுக்குக் கொடுத்து வாழ்த்தியருளினார்கள். மேலும் சிறிது காலம் அங்கேயே வாழ்ந்திருந்த ஆதியும் பகவனும், அந்த மலைச் சாரலையும் விட்டுப் புறப்படலாயினர்.
அப்படி, மலைச் சாரலை விட்டு வேறு ஊருக்குப் புறப்பட்ட ஆதியும் பகவனும் தொண்டை மண்டலத்திலேயே பெரிய தவம் செய்த ஊரான திருமயிலாப்பூருக்கு வந்தடைந்தனர். இங்கு இவர்கள் செய்த தவனத்தினால், தமிழுக்கே பெருமை சேர்ப்பது போல, இவ்வுலகுக்கே அறிவுரை சொல்லக்கூடிய வகையிலே, இளம் சூரியனைப் போல, அழகான ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தனர் ஆதியும் பகவனும். இக்குழந்தைக்கு அங்குள்ள அனைவரும் 'திருவள்ளுவர்' எனப் பெயரிட்டு அழைத்தனர். திருவள்ளுவரின் தொடர்ச்சியான வாழ்க்கை நிலையை, அவருக்குப் பிறகு பிறந்த குழந்தைகளைப் பற்றிக் கூறிய பிறகு தொடருவோம்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments