Ticker

6/recent/ticker-posts

Ad Code



91/3 டூ 355/4.. தெ.ஆ’விடம் கைமீறிய வெற்றியை பறித்த பாகிஸ்தான் சாதனை வெற்றி.. முத்தரப்பு ஃபைனலுக்கு தகுதி


பாகிஸ்தான் மண்ணில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் நியூசிலாந்து ஏற்கனவே ஃபைனலுக்கு தகுதி பெற்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய முக்கியமான போட்டி பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற்றது. கராச்சியில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 50 ஓவரில் அபாரமாக விளையாடி 352-5 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் தெம்பா பவுமா 82, மேத்தியூ பிரட்ஸ்கே 83, ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக 87 (56), கெயில் வேரின் 44* ரன்கள் அடித்து அசத்தினார்கள். பாகிஸ்தான் அணிக்கு அதிகபட்சமாக சாகின் அப்ரிடி 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அடுத்ததாக 353 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு 57 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த பஃகார் ஜமான் 41, பாபர் அசாம் 23 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சவுத் சாக்கில் 15 ரன்களில் அவுட்டானதால் 91/3 என ஆரம்பத்திலேயே சறுக்கிய பாகிஸ்தான் தோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது கேப்டன் முகமது ரிஸ்வான் – சல்மான் ஆகா ஆகியோர் ஜோடி சேர்ந்து விளையாடினர்.

ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல வேகமாக ரன்கள் குவித்து தென்னாப்பிரிக்காவுக்கு சவாலைக் கொடுத்து அரை சதத்தை அடித்தனர். அவர்களைப் பிரிக்க முடியாமல் தென்னாபிரிக்க அணி தடுமாறியது. அதைப் பயன்படுத்திய அந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 260 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

அதில் சல்மான் சதத்தை அடித்து 16 பவுண்டரி 2 சிக்ஸருடன்134 (103) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரிஸ்வான் 9 பவுண்டரி 3 சிக்ஸருடன் 122* (128) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் 49 ஓவரில் 355-4 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் 6 வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தத் தொடரின் ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளத் தகுதி பெற்றது.

மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து பாகிஸ்தான் சாதனையும் படைத்தது. இதற்கு முன் 2022 லாகூர் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 349 ரன்களை சேசிங் செய்ததே பாகிஸ்தானின் முந்தைய பெரிய வெற்றியாகும். மறுபுறம் தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக வியான் முல்தர் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

crictamil

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments