
ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் (Tokyo) வடக்கே ஏற்பட்ட திடீர்ப் பள்ளம் ஒலிம்பிக் நீச்சல் குளத்தைப் போல் விரிவடைந்து வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை (28 ஜனவரி) அந்தப் பள்ளம் ஏற்பட்டது.
அதில் சிக்கிய 74 வயது ஓட்டுநரை மீட்கும் முயற்சிகள் தொடர்கின்றன.
அவர் சிக்கியுள்ள இடத்தை அடைய 30 மீட்டர் நீளச் சாய்வுத் தளம் அமைக்கப்படுகிறது.
தேய்ந்துபோன கழிவுநீர்க் குழாய்களிலிருந்து வெளியேறும் தண்ணீரால் அந்தப் பள்ளம் விரிவடைந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அது மிகவும் ஆபத்தான சூழல் என்று உள்ளூர்த் தீயணைப்புத் துறைத் தலைவர் டெட்சுஜி சதோ (Tetsuji Sato) கூறியிருக்கிறார்.
பள்ளத்துக்குள் பாதுகாப்பாய்த் துளையிட்டு கனரக இயந்திரங்களை உள்ளே இறக்குவதற்குத் திட்டமிடப்படுவதாக அவர் சொன்னார்.
பள்ளத்துக்குள் தொடர்ந்து தண்ணீர் கசிவதால் அது விரிவடைவதாக அவர் கூறினார்.
செவ்வாய்க்கிழமை சம்பவம் நடந்ததிலிருந்து ஓட்டுநருடன் இன்னமும் எந்தத் தொடர்பும் இல்லை.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments