Ticker

6/recent/ticker-posts

Ad Code



வழுக்கை தலையுடன் திருமணம் செய்துகொண்ட மணப்பெண்.., வைரலாகும் வீடியோ


மணப்பெண் ஒருவர் வழுக்கை தலையுடன் திருமணம் செய்து கொண்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.

பெரும்பாலான மணப்பெண்கள் தங்கள் திருமணத்திற்கு முன் அவர்களின் தோற்றம், ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறார்கள்.

இருப்பினும் மணப்பெண் ஒருவர் வித்தியாசமான அணுகுமுறையை கையாண்டுள்ளார். அதாவது இந்த மணப்பெண், தோற்றத்தைப் பற்றி கவலைப்படுவதற்குப் பதிலாக தனது திருமண நாளில் நம்பிக்கையுடன் வழுக்கை தலையுடன் வந்தார்.

இந்த மணமகள் டிஜிட்டல் கிரியேட்டர் நீஹர் சச்தேவா ஆவார். இவர் அமெரிக்க வாழ் இந்தியர் ஆவார். இந்த பெண்ணிற்கு முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும் அலோபீசியா என்ற குறைபாடு உள்ளது.

இவருக்கு ஆறு மாத வயதில் அலோபீசியா இருப்பது கண்டறியப்பட்டது. இந்த குறைபாடு இருந்தால் உடலின் சில பகுதிகள் அல்லது அனைத்து பகுதிகளில் இருந்தும் முடி உதிர்தல் ஏற்படும்.

இவர் தனது திருமணத்திற்காக வழுக்கைத் தோற்றத்துடன் வருவதாகவே கூறினார். அதன்படி அவரது திருமண நாளில், நீஹர் பாரம்பரிய இந்திய திருமண உடையை அணிந்தார்.

மேலும் தனது வழுக்கையை விக் மூலம் மறைப்பதற்குப் பதிலாக பெருமையுடன் வெளிப்படுத்தினார்.

அதேபோல, சிவப்பு நிற லெஹங்கா ஆடையில், அழகான நகை அணிந்து சென்று, வருங்கால கணவர் அருண் கணபதியை கரம்பிடித்தார். இவரின் திருமண காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி காண்போரை நெகிழ வைத்துள்ளது. 

lankasri

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments