Ticker

Ad Code



இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா முக்கிய தலைவர் பலி! மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்!


இஸ்ரேல்-ஹமாஸ் இடையே சுமார் 15 மாதங்களுக்கும் மேலாக போர் நடந்தது வந்தது. கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் போர் தொடங்கிய நிலையில், காசாவில் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள வீடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என அனைத்தும் சேதமடைந்து அந்த நகரே மக்கள் வசிக்க முடியாத பாலைவனமாக மாறியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்ததன்பேரில் இஸ்ரேல் அரசும், ஹமாஸ் அமைப்பினரும் கடந்த மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதனைத் தொடர்ந்து இஸ்ரேலின் பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுவிக்கும் நடவடிக்கையும், இஸ்ரேல் படைகள் அங்கு இருந்து திரும்பும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகின்றன.

இதற்கிடையே ஹமாசுக்கு ஆதரவாக லெபனான் நாட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினார்கள். இஸ்ரேல் அவர்க்ளுக்கு பதில் தாக்குதல் கொடுத்து வந்தது. இஸ்ரேலும், ஹிஸ்புல்லா அமைப்பினரும் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் சண்டையிட தொடங்கிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இஸ்ரேல் லெபனான் இடையே சண்டையை முடிவுக்கு கொண்டு வர ஒப்பந்தம் போடப்பட்டது. 

இப்போது சண்டை நிறுத்தம் அமலில் உள்ள நிலையிலும், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா சில தாக்குதல் நடத்தி வருவதாகவும், இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் வான்வழிப் படைகளின் முக்கிய உறுப்பினர் அப்பாஸ் அகமது ஹமூத் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது லெபனானின் நாபாட்டெ என்ற பகுதியில் இஸ்ரேல் வான்வழித்தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லாவின் ட்ரோன் ஏவுதள தலைவர் அப்பாஸ் அகமது ஹமூத் கொல்லப்பட்டுள்ளார். மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி இருக்கின்றன. 

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகையில், ''இஸ்ரேலை நோக்கி ட்ரோன் ஏவுதல்களை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இது இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதாகும். ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் நாங்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் ஹிஸ்புல்லா வான்வழிப் படைகளின் முக்கிய உறுப்பினர் கொல்லப்பட்டார். மீண்டும் ட்ரோன் தாக்குதல் தொடர்ந்தால் ஹிஸ்புல்லா அமைப்பு இருக்காது'' என்று எச்சரிக்கை விடுத்தார்.

asianetnews

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments