
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தால் 24 மணி நேர ஒரு நாள் சேவை கடவுச்சீட்டுகளை வழங்குவது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு நாயகம் பி.எம்.டி. நிலுஷா பாலசூரிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவ்வறிக்கையில், “குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஒரே நாள் சேவையின் கீழ் விண்ணப்பிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளை வழங்குவதற்காக மட்டுமே 24 மணி நேர சேவையை இயக்குகிறது.
“மேலும், இந்த சேவைக்கான பதிவு வாரத்தின் ஒவ்வொரு திங்கட்கிழமையும் காலை 10 மணி முதல் திறந்திருக்கும். வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இது மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது
tamilmirror

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments